இதுவல்லவோ மனிதாபிமானம்?
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும், ஹீ கிஜ் ஜியாவு என்ற, 13 வயது சிறுமி, தன் கருணை உள்ளத்தால், இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டாள். இவளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீயுங் ஹூ என்ற சிறுமி போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருக்கிறாள். இருவரும், சிறு வயதில் இருந்தே இணை பிரியாத தோழிகள்.நடக்க முடியாத தோழியை, கடந்த மூன்று ஆண்டுகளாக, தன் முதுகில் சுமந்தபடி, பள்ளிக்கு அழைத்துச் செல்கிறாள் ஜியாவு. இதுகுறித்த செய்தி, சமூக வலை தளங்களில் வெளியாகியதால், உலகம் முழுவதும் இருந்து, ஜியாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால்,'என் தோழிக்காக இதைச் செய்கிறேன்; இதற்கு எதற்கு பாராட்டு?' என அப்பாவியாக கேட்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறாள், ஜியாவு.— ஜோல்னாபையன்.