இதல்லவோ தேனிலவு?
திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியர், சில நாட்களோ, ஓரிரு மாதங்களோ, தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தேனிலவுக்கு சென்று திரும்புவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த மைக், ஹோவர்ட் தம்பதியின் தேனிலவோ 675 நாட்கள் நீடித்துள்ளது. அதாவது, இரண்டு ஆண்டுகள். ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால், அவர்களை கேட்டால், 'இன்னும் சில மாதங்களுக்கு தேனிலவை நீட்டிக்க விரும்பினோம். பட்ஜெட் இடித்ததால், முடிக்க வேண்டியதாகி விட்டது...' என, வருத்தப்படுகின்றனர். தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள, 33 நாடுகளுக்கு சென்ற இவர்கள், அங்கு, 302 சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துள்ளனர்.— ஜோல்னா பையன்.