ஜூஸ்!
ப்ரூட் காக்டெயில்!திராட்சை ஜூஸ் - 1 கப், ஐஸ் கட்டிகள் - 1 கப், புதினாச் சாறு - இரண்டு மேஜைக் கரண்டி, எலுமிச்சை மற்றும் இஞ்சிச் சாறு இரண்டு மேஜைக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.இஞ்சி சாறு!ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், அரை கப் நறுக்கிய கொத்துமல்லி தழை ஆகியவற்றை, ஒன்றாக மிக்சியில் போட்டு, விழுதாக அரைக்கவும். நான்கு கப் தயிரை, நன்றாக அடித்து, அரைத்த கலவையை, இதனுடன் சேர்க்கவும். பின், பெருங்காயத்தூள் மற்றும் சீரகத்தூள் தலா அரை தேக்கரண்டி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து, பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.