கவிதைச்சோலை! - நிறைய பேர்...
வெட்டுக் கத்தியை விடகத்திப் பேசி பிறரைகாயப்படுத்தியவர்கள்நிறைய பேர்!வெடிகுண்டை விடவெகுண்டு எழுந்துபிறரை மடியச் செய்தவர்கள்நிறைய பேர்!கல் எறிந்துமாளிகையை உடைத்தவர்களை விடசொல் எறிந்துமனங்களை உடைத்தவர்கள்நிறைய பேர்!நம்பிக் கெட்டவர்களை விடகெட்டுப் போய்நம்பியவர்கள்நிறைய பேர்!தப்பான உறவுகளை விடநட்பான உறவுகளில்தடம் புரண்டவர்கள்நிறைய பேர்!சண்டை போட்டுபேசாமல் இருப்பவர்களை விடபேசினால் சண்டை வரும் - எனஇருப்பவர்கள் நிறைய பேர்!பாகப் பிரிவினையால்பிரிந்தவர்களை விடமோகப் பிரிவினையால்பிரிந்தவர்கள்நிறைய பேர்!விதி வந்துவிழுந்தவர்களை விடமதியிழந்துமரணித்தவர்கள்நிறைய பேர்!எல். ரவி, செ.புதுார்.