உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - தரணி முழுக்க பரணி !

* செம்மொழித் தேரேறிசெந்தமிழ்த் தாய் - இதோபவனி வந்துவிட்டாள்கோவை மாநகரில்!* பெருமிதம் கொள்...உலகப் பொதுமறைதிருக்குறள் தந்ததெய்வப் புலவர்திருவள்ளுவ மகானின்தாய்மொழித் தமிழ்செம்மொழியானது!*நெஞ்சம் நிமிர்நனவாகிறதுபாரதியின் கனவு...காலம் கனிந்தது...உலகத் தெருக்களில்தேனாய்ப் பாயவிருக்கிறது'தேமதுரத் தமிழோசை!'* பரவசம் கொள்...காட்சியளிக்கிறாள்தமிழன்னை...காலில், 'சிலம்பு'இடையில், 'மேகலை'மார்பில், 'சிந்தாமணி'காதில், 'குண்டலகேசி'கைக்கு, 'வளையாபதி'முடியில், 'சூடாமணி' சூடிகையில் செங்கோலாய்,'திருக்குறள்' ஏந்திய தமிழன்னையின் தரிசனம்...பாவேந்தருக்கு மட்டுமல்ல — இனி...பார் முழுக்கக் கிடைக்கும்!* எங்கள் வாழ்வும்...எங்கள் வளமும்...வளைத்து விட...வேண்டாத பொருளானோம்...வீடு வரை உறவும்இனி இல்லை...முதியோர் இல்லமேஇனி எங்கள் கூடு!* இங்கும்எங்களைப் போலவேதனித்து விடப்பட்டதாய்ப்பறவைகள்ஏராளம் பேர்...கடந்த கால நினைவுகளையும்கானல் நீரான கனவுகளையும் கண்ணீருடன் அசை போட்ட படி... * இப்பொழுதும் கூடபால்ய நினைவுகளின் சாரலில்காகிதத்தில் கப்பல் செய்துகாத்திருக்கிறேன்!* ஏனோ தெரியவில்லைமழைதான் வரவே இல்லை...என்ன காரணமோ...மனித நேயம் மறந்தமனிதர்களாலா?நன்றி மறந்தபிள்ளைகளாலா?* தெரியவில்லை!— க.விஜயபாஸ்கர்,  மூவானூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !