உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - ஆசைப்படாதே!

விளக்கின் ஒளியில் மயங்கிவிழுகிற விட்டில் பூச்சியாய்பார்க்கும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படாதே!சிலந்தி வலை அழகில் விழுந்துஉயிரிழக்கும் பட்டாம் பூச்சியாய்அனைத்தும் அடைய எண்ணாதே!துாண்டில் புழுவை விரும்பிமுள்ளில் துடிக்கும் மீனாய்கண்ணில் காண்பதை விரும்பாதே!திருட்டு வடை தின்னத் துடித்துபொறியில் மாட்டித் துன்பப்படும்எலியாய் என்றும் இருக்காதே!வேலியைத் தாண்ட நினைத்துமின்சாரம் பாய்ந்து இறக்கும்பன்றியாய் எப்போதும் பலியாகாதே!ரத்தம் குடிக்கக் கடிப்பதால்அடிபட்டுச் சாகும் கொசுவாய்பரிதாப நிலைக்கு ஆளாகாதே!வேடன் விரித்த வலையில்சிக்கித் தவிக்கும் பறவை போலசிந்திக்காமல் மாட்டிக் கொள்ளாதே!நீயொரு மனிதப் பிறவி என்பதால்உழைத்து மட்டுமே உடல் வளர்க்கஉயிர் உள்ள வரை பேராசைப்படு!— எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !