கவிதைச்சோலை - தகப்பன் ஒரு தாரக மந்திரம்!
தப்புக்கு - ஒருஅப்பு வாங்கிபதிந்த ரேகைகள்...தவறே கூடாதெனதடயங்களாகப் பதிந்தமுதல் தகவல் அறிக்கைஅப்பாவின் சட்டம்!நெஞ்சு நிமிர்த்தலையும்மரியாதை நிமித்தத்தையும்உரிய இடத்தில் காட்டபுத்தகம் புரட்டாதஆசிரியராய்அப்பாவின் பாட நுால்!காலை கடனுக்கும் - முறையானமாலை பயிற்சிக்கும்கால அட்டவணை தரும்உடற்பயிற்சி இயக்குனராய்அப்பாவின் ஒழுங்கு!மனமும், ஆரோக்கியமும்மணம் வீசமேனி சுத்தத்தையும்பேணிட அக்கறையுடன் வரும்மானிட சுகாதார நிலையமாய்அப்பாவின் கட்டுப்பாடு!பாசமிகு சகோதரர்களைபங்காளி ஆக்கிடாமல்பங்கு சொத்தில்பஞ்சாயத்து வராமல்துல்லியமாகபாகப்பிரிவினை செய்யும்நீதித்துறையாய்அப்பாவின் தீர்ப்பு!பொய்யெனும் பூட்டைசாய்க்கும் சாவிஉண்மை என்பதைநெற்றிக்கண் திறந்தாலும்நக்கீரனாய்நின்று உணர்த்திதர்ம சக்கரம் சுழற்றும்அறநிலையத் துறையாய்அப்பாவின் பூர்வீகம்!மாய, 'வலை'தளங்களில்மாட்டிக்கொள்ளாமல்மந்திர சொல்லின்மகத்துவம் கற்றுமண்ணின் மைந்தர்களாகதலை நிமிர்ந்திடும்தலைமுறைகள்நாங்கள்உங்களுக்கு வழங்கிடபெருமைப்படுகிறோம்சிறந்த குடிமகன் விருதைஒவ்வொரு அப்பாக்களுக்கும்!— சு. பிரபாகர், வில்லாபுரம், மதுரை.