உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - வாழப் பழகு!

தலைக் குப்புறகவிழ்த்துப் போட்டாலும்எழுந்து வருகிறது தீ!மரங்கள், மலைகள்எதுவரினும் எது எதிர்படினும்இலக்கை அடைகிறது காற்று!தோண்டித் தோண்டிகளைத்துப் போகும்மானுடத்தைதாங்கிப் பிடிக்கிறது பூமி!பிளாஸ்டிக் குப்பிகளில்அடைத்து அடைத்து விற்றாலும்மழையாய் வருகிறது நீர்!கரி அமிலத்தால்காரித் துப்பினாலும்முகம் காட்டத்தயங்காமல் வருகிறது ஆகாயம்!தினமும்அபகரித்துக் கொண்டாலும்அடுத்த நாளும்பூக்கிறது செடி!கண்டம் துண்டமாய்வெட்டிச் சாய்த்தாலும்துளிர்க்கிறது மரம்!கருவேல முட்கள்காயப்படுத்தி விட்டதாகமூக்கைச் சிந்தும்பறவை பார்த்ததுண்டா?எந்த மாடும்தன் கொம்புகளில்தீனியை கட்டிக்கொண்டுமேயப் போவதில்லை!கல் தடுக்கியதாய்முள் குத்தியதாய்பிறர் மட்டம் தட்டியதாய்பிதற்றும் மனிதாபிரபஞ்சத்திடம்நாளும் பாடம் கற்றுக்கொள்!— சு. கல்யாணசுந்தரம், புவனகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !