கவிதைச்சோலை - சொர்க்கமும் நரகமும் நம்மிடமே!
செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிமறுபடியும் அதே தவறுகளைசெய்ய விடாமல்நல்ல பாடங்களையும்அனுபவத்தையும் கற்றுக் கொடுத்துஅடுத்த வெற்றிப் பாதைக்குவழி காட்டும் ஆசானாய் வரும்தோல்வியே வா!பிறர் கேவலமாக பேசிமட்டம் தட்டி ஒதுக்கிய நிலையில்வைராக்கியம் கொடுத்து எழுந்து தன்னம்பிக்கையாய்வாழ வழி செய்த அவமானமே வா!எனக்குள்ளிருக்கும் குறைகளையும், குற்றங்களையும் புதைந்திருக்கும் திறமைகளையும் வெளிக் கொண்டு வந்தஎதிரியே வா!பிரச்னைகளைக் கண்டுபின் வாங்கிய என்னைஎதையும் சாதிக்கவும்சமாளிக்கவும் முடியும் என்றுதன்னம்பிக்கையையும்தைரியத்தையும்கொடுத்த சவாலே வா!உளி தரும் வலியால்கல் சிலையாகிறதுநெருப்பில் சுட்டத் தங்கம்புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது!தோண்டி சிதைக்கப்பட்ட மண்விளை நிலமாகிறதுமுள் செடியிலே ரோஜா மலர்கிறது...துன்பங்களால் மனம் உறுதியாக்கப்படுகிறதுபிரச்னைகள் சாதனை படைக்கத் துாண்டுகிறது!— எம். பாலகிருஷ்ணன், பசுமலை, மதுரை.