கவிதைச்சோலை - நேர்மை புதைந்த ஆண்மை
* நான் முள்ளாய்குத்தினாலும்முகம் சுளிப்பதில்லை நீ...* என் அழகுக்குதகுதியற்றவன் நீயெனமூக்கை உடைக்கிறேன்...உண்மையென ஆமோதித்துஎன் உச்சி முகர்கிறாய்!* எனக்கொரு கஷ்டமெனில்உனக்கு வந்ததாய்உதடு துடிக்கிறாய்...உனக்கொரு பிரச்னையெனில்நடிக்கத்தான் முடிகிறது என்னால்!* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்அதை வாங்கஅவசரமாய் யோசிக்கிறாய்...உன் மீது இடியே விழுந்தாலும்பதறாமல் நிதானிக்கிறேன் நான்!* உன் பிறந்த நாளேஎன் பிறந்த நாளென்கிறாய்...காதுக்குள் கவிதை சொல்லியேகலங்கடிக்கிறாய்!* உன்னைக் கைப்பிடித்த பிறகேமுற்றுபெற்றேனென்கிறாய்...என்னைத் தொட்ட அன்று தான்முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!* காதல் நாரெடுத்துகாதில் பூவைத்துஎன் தேகம் தீண்டிவிட்டுச் சென்ற அவனெங்கே?* எல்லாம் தெரிந்திருந்தும்உள்ளங்கை வெண்ணையாய்என்னைத் தாங்கும் நீயெங்கே?* இனியும்உள்ளக் குறுகுறுப்போடுமனசாட்சிக்கு துரோகமிழைத்துஎன்னால் வாழ முடியாது...* ஆதலால் தான் சொல்கிறேன்என் அன்புக் கணவா...* கொந்தளி...கோபப்படு...என்னைக் கொடுமைப்படுத்து...உன்னை விட்டு விலகிவெகுதூரம் செல்ல வேண்டும்!— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.