கவிதைச்சோலை! - நினைவு கொள்வோம்!
அணையாத கோபம்அடிக்கல் இட்டு வந்தால்அமைதியற்ற வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!இணையாத இன்பம்இல்லமேறி வந்தால்இருட்டறையே வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!பொறுக்காத பொறுமைபொங்கி வந்தால்பொல்லாத வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!தொலைக்காத துயரங்கள்தொடர்ந்து வந்தால்துன்பமான வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!கலையாத கவலைகையோடு வந்தால்கல்லறைதான் வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!மாறாத வலிமனதினுள் வந்தால்மகிழ்ச்சியற்ற வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!நிலைக்காத நிம்மதிநீண்டு போனால்நிச்சயமற்ற வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!நீங்காத ஆசைநெஞ்சோடு வந்தால்நிறைவற்ற வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!அமைதி குலைக்குமிந்தஅழுக்கு வஸ்திரங்களைஅலசி அணிந்து கொண்டால்அமைதியான வாழ்வு என்பதைநினைவில் கொள்வோம்!க. அழகன், கொச்சி