கவிதைச்சோலை - காதல் சாம்ராஜ்யம்!
தோற்றாலும் வெல்வதுகாதலில் மட்டுமேஇதயச் சிறையில்ஆயுள் கைதியாய் அவள்!இதய சிம்மாசனத்தில்தன் காதல் ராணியைஅமர வைத்த பிறகேபடையெடுக்கின்றனர்காதல் ராஜாக்கள்!சொல்வதாலும்சொல்லாததாலும்தோல்வியை சந்திக்கின்றனகாதலில் பல!வெற்றி பெறும்காதலில் சிலகாணாமல் போகின்றனகல்யாணத்திற்கு பின்!குடி கெடுக்குமென தெரிந்தும்குடிப்பது போலஎதைப் பற்றியும் கவலையின்றிதொடரத்தான் செய்கின்றனகாதலில் பல!உயிரை இழந்த பின்பும்உயிர்த்தெழுகின்றனவரலாறாய் பல காதல்!காதல் இல்லாத வாழ்வுஉப்போ அல்லது இனிப்போஇல்லாத வெறுமை!காதல் இன்னொரு உலகம்நீயே ராஜாவாய்நீயே மந்திரியாய்அமைத்துக்கொள்பூஜ்யம் இல்லாதகாதல் சாம்ராஜ்யம்!— வீ. உதயக்குமாரன், திருவாரூர்.