உள்ளூர் செய்திகள்

கிக் ஏற்றும் காளான்!

போதைக்கு அடிமையானோர், புதுப்புது போதை பொருட்களை தேடி, அலைவது வழக்கம்.தற்போது, கொடைக்கானலில், போதை காளான், மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், 12 காளான்கள், 750 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது.காட்டுப்பகுதியில், விழுந்து கிடக்கும் மரங்களுக்கு கீழ் வளரும் இந்த காளான்களில், 'சிலோசிபின்' என்ற ரசாயனப் பொருள் இருப்பதால், போதை உண்டாவதாக கூறுகின்றனர். இதை, பச்சையாகவோ அல்லது காய வைத்தோ சாப்பிடுகின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !