உள்ளூர் செய்திகள்

கின்னார்!

இமாச்சல் பிரதேசத்தின், கின்னார் மாவட்டத்தில், முராங் என்ற கோடை வாசஸ்தலம் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கு திசை தவிர, மற்ற மூன்று பக்கங்களும் உயரமான மலைகளை கொண்டவை.இங்கு, ஒரு பழமையான கோட்டை உள்ளது. இதை, பஞ்ச பாண்டவர்கள் கட்டியது என, உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.சட்லஜ் நதியின் கரையில் அமைந்துள்ள, இந்த கிராமத்தின் அழகே, சீமை வாதுமை பழம் பண்ணைகள் மற்றும் மலைகள் தான். கூடுதலாக, பசுமையான பூமி. இங்கு, சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்; சத்தமே கிடையாது. நினைத்த மலைகளில் ஏறி இறங்கலாம். இங்கிருந்து, கைலாஷ் மலையை தரிசிக்கலாம். சிவலிங்க குன்று உள்ளது, அதையும் தரிசிக்கலாம்.டில்லியிலிருந்து, கின்னார் சென்று, அங்கிருந்து சிம்லாவுக்கு ரயிலில் பயணித்து, சிம்லாவிலிருந்து முராங்கிற்கு பஸ்சில் பயணிக்கலாம். 28 கி.மீ., தான். ஆனால், எட்டு மணி நேரம் ஆகும். டில்லியிலிருந்து, 17 மணி நேர பயணம். சுற்றுலா செல்ல, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சிறந்த காலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !