உள்ளூர் செய்திகள்

குறுக்கு சிறுத்தவளே!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், டயானா ரிங்கே, வயது, 39; அமெரிக்க கடற்படையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற இவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், இரட்டை குழந்தைகள் பிறந்தன.இதற்கு பின், இவரது இடுப்பு அளவு அதிகரித்து விடவே, கவலை அடைந்த அவர், இடுப்பு அளவை குறைப்பதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, 'பெல்ட்'டை அணியத் துவங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைக்கவே, குளிக்கும் நேரம் தவிர, எல்லா நேரங்களிலும், பெல்ட்டுடன் தான் வலம் வருகிறார். இப்போது, அவரது இடுப்பளவு, 18 அங்குலமாக குறைந்து விட்டதால், சந்தோஷத்தில் திளைக்கிறார். ஒரு நாளைக்கு, 23 மணி நேரம் பெல்ட் அணிவதாக பெருமையுடன் கூறும் டயானா, 'என் கணவரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், இது சாத்தியமாகியிருக்காது. மூன்று ஆண்டுகளாக, இந்த பெல்ட்டை அணிகிறேன்; என்னிடம், 454 பெல்ட்டுகள் உள்ளன. இதற்காக, 60 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !