உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையை ஆனந்தமாக வாழ...

'காதல் மற்றும் உடல் உறவு என்பது, ஓர் உன்னதமான அனுபவம்; வாழ்க்கையை உற்சாகமாக வாழ வைப்பவை...' என்று கூறுகிறார், கேரளாவை சேர்ந்த, எழுத்தாளர் சி.எஸ்.சந்திரிகா. 'ஆயிரம் உம்மகள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய நாவலும், காதல் மற்றும் 'செக்ஸ்' பற்றியது தான்.'அந்நுால் ஓர் ஆபாச களஞ்சியம்; தடை செய்யப்பட வேண்டியது...' என்று சில அமைப்புகள், போர்க்கொடி துாக்கின. இதற்கெல்லாம் அசரவில்லை, சந்திரிகா.'நான் சந்தித்த பெண்களில், அதிகமானோரின் கண்களிலும் ஒளியே இல்லை; அவர்களது கண்களில் சோகத்தையே பார்க்கிறேன். சிலரிடம், 'உங்கள் உடலை, நிர்வாணமாக நின்றவாறு கண்ணாடியில் பார்த்ததுண்டா...' என்று கேட்டேன். அவர்களில் ஓரிருவர் தவிர, மற்றவர்கள் யாருமே, தம் உடலை முழுவதுமாக பார்த்ததே இல்லை என்றனர்.'காதல் என்பது, உடல் உறவு, உடல் மற்றும் மனதை சார்ந்தவை; அவை உன்னதமானவை. இதை புரிந்தவர்கள், வாழ்க்கையை ஆனந்தமாக நடத்தி செல்வர். மற்றவர்கள், ஏனோதானோ என்று வாழ்கின்றனர்...' என்கிறார், சந்திரிகா.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !