பொய் சொன்னால், அனுமதியில்லை!
ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் கவனிக்கவும்... பொய் சொல்பவரானால், அங்கு அனுமதி மறுக்கப்படும். ஐரோப்பாவுக்கு வரும் சுற்றுலா பயணியரை பரிசோதனை செய்ய, ஹங்கேரி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில், பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் கருவி, நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆனவை அல்ல. 'லை டிடெக்டர்' கருவி முன் பரிசோதனைக்கு வருவோரிடம், சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த சோதனைகளை தாண்டி தான், ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும். —ஜோல்னாபையன்.