மாங்காய் ரசம்!
தேவையான பொருட்கள்:மாங்காய் - 1 பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிபூண்டு - 4 பல்மிளகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டிகொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, பெங்காயத்தூள், உப்பு மற்றும் நெய் - தேவைக்கேற்ப.செய்முறை: மாங்காயின் தோல் மற்றும் கொட்டையை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும்; ஆறிய பின், விழுதாக அரைக்கவும். பூண்டுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து தட்டி எடுக்கவும். பாத்திரத்தில், அரைத்த மாங்காய் விழுதுடன், தட்டிய பூண்டு விழுது, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி விட்டு இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாயை, நெய்யில் தாளித்து, கலக்கவம். சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லியை துாவி, பரிமாறவும்!