மெகா இட்லி!
இட்லி எந்த அளவில் இருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், தோசை அளவிலான இட்லியை பார்த்து இருக்கிறீர்களா?பாலக்காட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் உள்ளது ராமசேரி எனும் ஊர்; இங்கு பாக்யலட்சுமி என்ற பெண், இட்லி கடை வைத்துள்ளார். இவர், ஒரு பெரிய பானையில் தண்ணீர் ஊற்றி, அதன் வாயை துணியால் கட்டி. தண்ணீர் கொதிக்கும் போது, இட்லி மாவை, துணியில், தோசை அளவிற்கு ஊற்றுகிறார். சிறிது நேரத்தில், மெகா சைஸ் இட்லி தயார். இந்த இட்லிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.—ஜோல்னா பையன்.