மிக்ஸ்டு ப்ரூட் பன்ச்!
தேவையானவை: நறுக்கிய வாழைப் பழம், பலாப் பழம், பப்பாளி, மாம்பழம் சேர்த்து - ஒன்றரை கப், ஏதாவது ப்ரூட் எசன்ஸ் - சில துளிகள், தேன் - 2 தேக்கரண்டி, முந்திரி, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்தது) - ஒரு தேக்கரண்டி, ப்ரெஷ் க்ரீம் - ஒரு தேக்கரண்டி.செய்முறை: பழக் கலவையை மிக்சியில் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுக்கவும். இதனுடன் ப்ரூட் எசன்ஸ் மற்றும் வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறவும். அரை மணி நேரம், 'பிரிஜ்'ஜில் குளிர வைத்து எடுத்து, தேன், ப்ரெஷ் க்ரீமை பரவலாக ஊற்றி பரிமாறவும்.