பாடம் படிக்கும் குரங்குகள்!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவ பல்கலையில், நரம்பு உயிரியல் துறை நிபுணராக பணியாற்றுபவர், மார்கரேட் லிவிங்ஸ்டன். இவரும், இவரின் குழுவைச் சேர்ந்தவர்களும், குரங்குகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வித்தியாசமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, மூன்று குரங்குகளை தேர்வு செய்து, கடந்த சில மாதங்களாக, அவற்றுக்கு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை குறித்து, பாடம் கற்று கொடுத்து வருகின்றனர். 1 முதல் 25 வரையிலான எண்களையும், 'ஏ' முதல், 'இசட்' வரையிலான எழுத்துகளையும், மூன்று குரங்குகளுமே, நன்றாக கற்று விட்டன. ஒரு போர்டில், எண்களையும், எழுத்துகளையும் எழுதி, குறிப்பட்ட எண் அல்லது, 'ஏ' எழுத்து ஆகியவற்றை சத்தமாக உச்சரித்தால், மூன்று குரங்குகளும், சரியாக அவற்றை அடையாளம் காட்டுகின்றன.— ஜோல்னாபையன்.