உள்ளூர் செய்திகள்

மைதானத்துக்கு இடம் கிடைக்கலையாம்!

சீனாவின் ஜெஜியான் மாகாணத்தில், டியான்ட் என்ற சிறிய நகரம் உள்ளது. மிக குறைந்த பரப்பளவு உடைய இந்நகரில், கட்டடங்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், இங்குள்ள ஆரம்ப பள்ளிக்கு, மைதானம் அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியான மொட்டை மாடியையே மைதானமாக்கி விட்டனர். இந்த மைதானத்தில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தும் அளவுக்கு, இப்போது வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாது காப்பு கருதி, மொட்டை மாடி மைதானத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப் பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !