உள்ளூர் செய்திகள்

நாவல் பழம்!

ரத்தக் கொதிப்பு மற்றும் நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்கு, சிறந்த மருந்து, நாவல் பழம். இதை உட்கொள்வதன் மூலம், சீதபேதி, உடல் சூடு மற்றும் கண் எரிச்சல் தீரும்.நாவல் பழத்தின் பருப்பை, காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில், இப்பொடியை தயிருடன் கலந்து பருகினால், குணம் பெறலாம்.அத்துடன், இப்பொடிக்கு, ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் சக்தி உண்டு.தூக்கமின்றி அவதிப்படுவோர், மதிய உணவுக்கு பின், நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை பிரச்னை தீருவதுடன், உடம்பிற்கும் குளிர்ச்சி தரும். மேலும், மெலிந்த உடல் உள்ளவர்கள், தினமும், நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், உடல் தேறும்.இப்பழத்தை, பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !