உள்ளூர் செய்திகள்

விழாக்களுக்கு இனி, ரப்பர் யானைகள் தான்!

கேரளாவில், கோவில் திருவிழா, கட்சி மாநாடு மற்றும் கடை திறப்பு ஆகியவற்றின்போது, யானைகளை வரவழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கோவில் விழாக்களுக்கு அழைத்து வரும் யானைகள், சில சமயம் மதம் பிடித்து, ரகளை செய்வதுண்டு. இதில், உயிர் சேதமும் ஏற்படுவது வழக்கமாக இருந்தது.இதை தவிர்க்க, 'டூப்ளிகேட்' யானைகளை உருவாக்கி வருகிறது, திருச்சூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று. அசல் யானை போல், முழுக்க முழுக்க ரப்பரால் உருவாக்கப்படும் இவைகளுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகிறது, இந்த நிறுவனம். வெளிநாடுகளில் நடைபெறும் விழாக்களுக்கு கூட இவர்கள், ரப்பர் யானைகளை ஏற்றுமதி செய்கின்றனராம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !