உள்ளூர் செய்திகள்

ஒருவரது தலை இன்னொருவருக்கு!

மருத்துவம், நாளுக்கு நாள், முன்னேறி வருவதால், மனித உறுப்புகளை, ஒருவரிடமிருந்து, வேறு ஒருவருக்கு பொருத்துவது, சகஜமாகி விட்டது. 'அனைத்து உறுப்புகளும் மாற்றப்படும் போது, ஏன் தலையை மாற்றக் கூடாது...' என்ற கேள்வியை, சீன மருத்துவர் சியா ஓபிங்ரென் மற்றும் இத்தாலி மருத்துவர் செர்ஜியோ கனாவிறோ ஆகியோர் எழுப்பி உள்ளனர்.இந்நிலையில், 'தன் தலையை, மாற்ற பூரண சம்மதம்...' என்று தெரிவித்துள்ளார், ரஷ்யாவை சேர்ந்த, 31 வயது, வலேரி ஸ்பிரிடோநோவ். இவர் உடலில் பொருத்துவதற்கு, சரியான தலை கிடைத்தால், அறுவை சிகிச்சை செய்ய, தயாராக இருக்கின்றனர் மேற்கூறிய இரு மருத்துவர்கள்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !