உள்ளூர் செய்திகள்

ரோபோவின் ஆபரேஷன்!

தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள், இப்போதெல்லாம், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப் படுகின்றன.சீனாவின் குவாங்டாங் என்ற மாகாணத்தில், சமீபத்தில், ஆறு வயது சிறுவனுக்கு சீறுநீரக ஆபரேஷன் செய்யும் பணியில், ஒரு ரோபோ பயன்படுத்தப்பட்டது.டாக்டர்களின் கண்காணிப்பில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த, அந்த அறுவைச் சிகிச்சையை, மிக சர்வ சாதாரணமாக செய்து முடித்துள்ளது, ரோபோ. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மருத்துவ துறையில் ரோபோக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், சீனாவில், ஒரு ரோபோ, அறுவைச் சிகிச்சை செய்தது, இது தான், முதல் முறை.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !