உள்ளூர் செய்திகள்

ஒசாமா பின்லேடன் கதை, திரைப்படமாகிறது!

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இறந்த பிறகும், ஹாலிவுட்டில், அவர் பற்றிதான் பேச்சு உலவுகிறது.ஒசாமா பின்லேடன் பற்றிய திரைப்படம் அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, 'ஹர்ட் லாக்கர்' படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்காக, ஆஸ்கர் விருதை பெற்ற காதரின் பிஜ்லோ, அப்போதிருந்தே, ஒசாமா பின்லேடன் பற்றிய படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.படத்தின் பெயர், நடிகர், நடிகைகள் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.காதரின் யார் தெரியுமா? டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் மனைவி.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !