திண்ணை!
அண்ணாதுரை எழுதிய, 'சந்திரமோகன்' என்ற நாடகத்தில், அவர், காகப்பட்டர் என்ற முக்கிய வேடத்தில் நடித்தார். காகப்பட்டருக்கு பிரதம சீடனாக, ரங்கு என்பவன் வருவான். அதில், திரவுபதியைப் பற்றிய உரையாடல், காகப்பட்டருக்கும், ரங்குவிற்கும் இடையில் நடைபெறும்...'திரவுபதிக்கு, ஐந்து கண வர்கள். ஒரே சமயத்தில் தருமர் சொக்கட்டான் ஆடவும், பீமன் சாப்பாடு போடவும், அர்ச்சுனன் உலாவப் போகவும், சகாதேவன் தரும நூல் படிக்கவும், நகுலன் குதிரை சவாரி செய்யவும் கூப் பிட்டால், அவள் என்ன செய்வாள்?' என்று காகப்பட்டர் ஒரு கேள்வி கேட்பார்.'என்ன செய்ய முடியும்; ரொம்ப சங்கடம் தான்!' என்பார் ரங்கு.'நினைப்பதற்கே இவ் வளவு சங்கடம் என் கிறாயே, இதைப் போல எவ்வளவு சங்கடங்களை அந்தப் பதிவிரதை தாங்கி யிருப்பாள்!' என்பார் காகப் பட்டர்.'என்ன செய்தாள், சுவாமி?' என்று கேட்பான் ரங்கு.'திரவுபதி, உடனே கிருஷ்ண பரமாத்மாவை நினைத்துக் கொண்டாள். அப்போது, ருக்மணியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து, சல்லாபித்துக் கொண் டிருந்தார் கிருஷ்ண பரமாத்மா. 'கிருஷ்ண பரமாத்மா யாருடன் இருந்தார்?' என்று சீடனை கேட்பார் காகப்பட்டார். 'ருக்மணியுடன்' என்று சொல்ல வேண்டும் ரங்கு.ஆனால், ஒரு நாள், 'சந்திரமோகன்' நாடகத்தில் இந்த கட்டம் வந்த போது, 'கிருஷ்ண பரமாத்மா, யாருடன் இருந்தார்?' என்று காகப்பட்டர் கேட்ட போது, 'ருக்மணியுடன்' என்று சொல்வதற்குப் பதில், ரங்கு வேடம் போட்டவர்,'திரவுபதியுடன்' என்று தவறிச் சொல்லி விட்டார்; மிகத் தவறான பதில்.காகப்பட்டர் வேடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால், திகைத்துப் போயிருப்பர். ஆனால், அண்ணாதுரை சமாளித்து, 'ஏண்டா மண்டு... ராதா, ருக்மணி, சத்தியபாமா, ஆயிரம் கோபிகைகள் போதாதென்று, திரவுபதியையும் அனுப்பி வைத்து விட்டாயா?' என்று சொன்னார்.கைத்தட்டலில் கொட்டகை அதிர்ந்தது. தவறைப் புரிந்து கொண்ட ரங்கு வேடத்தில் இருந்தவர், 'தெரியாத்தனமாக சொல்லி விட்டேன், நான் மண்டு சுவாமி!' என்று நிலைமையை சமாளித்தார். இந்தப் பதில் பின்பு நிரந்தரமாகவே நாடகத்தில் சேர்ந்து விட்டது. — 'அண்ணாவின் நாடகங்கள்' நூலிலிருந்து...காந்திஜி, வட்ட மேஜை மாநாட்டுக் காக லண்டன் சென்றிருந்த சமயத்தில், அவரை நேரில் சந்தித்து, அமெரிக்காவிற்கு அழைத்து வருவதற்காக புகழ்பெற்ற இரண்டு அமெரிக்கர்கள் லண்டனுக்குச் சென்றனர்.காந்திஜி அமெரிக்காவிற்கு வந் தால், அவரும், அவருடைய பரிவாரங்களும் தங்குவதற்காகத் தங்கள் ஓட்டலில் ஒரு மாடி முழுவதையும் இலவசமாகத் தருவதாகவும், காந்திஜிக்கு உண வளிக்கும் சிரமமான வேலையை, அதாவது ஆட்டுப்பால் தயாரிப் பதைத் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் உலகப் புகழ் பெற்ற ஒரு ஓட்டல் நிர்வாகத்தினர் கூறினர். அதுமட்டு மல்ல, வெளி நாடுகளி லிருந்து பிரபலமானவர்கள் வந்து தங்கினால், அவர், எந்த நாட்டுப் பிரமுகரோ, அந்த, நாட்டுக் கொடியை ஓட்டலில் பறக்க விடுவது வழக்கம். காந்திஜி வந்து தங்கினால், இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியைப் பறக்க விடுவதாகவும் கூறினர்.அமெரிக்காவில் உள்ள பெரிய (தனியார்) வானொலி நிலையங் களுள் ஒன்று, காந்திஜி தம் வானொலியில் ஐந்து நிமிடம் பேசினால், தம் வானொலிக்கு கிடைக்கும் அன்றைய வருமானம் முழுவதையும் காந்தி நிதிக்குக் கொடுப்பதாகக் கூறியது.அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற தினசரி பத்திரிகை ஒன்று, காந்திஜி அமெரிக்காவில் தங்கும் வரை, தம் பத்திரிக்கை நிருபர் ஒருவரை உடனிருக்க அனுமதித்தால், லட்சம் டாலர் காந்தி நிதிக்குத் தர முன் வந்தது. ஆனால், காந்திஜி தனக்கு நேரமில்லை என்றும், வர இயலவில்லை என்றும் கூறி விட்டார்.இதுவரையில் அமெரிக்கா அழைத்து, அங்கு செல்லாத உலக தலைவர்களே கிடையாது. சிலர், அமெரிக்கா வருவதற்குத் துடிப்பர்; சிலர், தாங்களே முயன்று அமெரிக்காவின் அழைப்பைப் பெறுவர். ஆனால், அமெரிக்கா வருந்தி அழைத்தும் வராத தலைவர் காந்திஜி ஒருவர் மட்டும் தான்.— ஏ.கே.செட்டியாரின், 'அண்ணலின் அடிச்சுவட்டில்' நூலிலிருந்து...- நடுத்தெரு நாராயணன்.