திண்ணை!
வின்ஸ்டன் சர்ச்சிலிடம், அந்தரங்கப் பணி யாளராக இருந்தவர் நார்மன். இவர் சர்ச்சிலைப் பற்றி, 'மை இயர்ஸ் வித் சர்ச்சில்' என்றொரு நூல் எழுதினார். அதில்: என் எஜமானர், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவருக்கு, தன் கட்சியிலிருந்த அக்கறையைக் காட்டிலும், ஜனநாயகத்திலுள்ள நம்பிக்கை அதிகம். 1951 தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...அப்போது லண்டனில் இருந்தோம். தேர்தலுக்கு முன்தினம் நான், அவருக்கு சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த போது, 'இங்கே உனக்கு ஓட்டு இருக்கிறதல் லவா? வாக்காளராகப் பதிவு செய்து விட்டாயா?' என்று விசாரித்தார்.வெளியூர் ஒன்றில் எனக்கு ஓட்டு உண்டென்றும், இப்போது அவருடன் லண்டனில் இருக்க வேண்டியிருப்பதால், ஓட்டைப் பதிவு செய்ய இயலாது என்றும், அதனால், பரவாயில்லை என்றும் கூறினேன்.'நீ கட்டாயம் ஓட்டுப் போட வேண்டும்...' என்றார் அவர் உறுதியாக. 'எந்தக் கட்சிக்குப் போடுகிறாய் என்பது முக்கியமல்ல. நான் ஏற்பாடு செய்கிறேன். நாளைக்கு நீ, உங்கள் ஊரில் ஓட்டைப் பதிவு செய்துவிட்டு வா!' என்றார்.என் அரசியல் கருத்துக்களை அவர் அறியாதவர் அல்ல. என் ஓட்டு எதிர்க்கட்சிக்குத்தான் என்பது அவருக்குத் தெரியும்!காலையில் எழுந்ததும், பெட் காபி சாப்பிட மாட்டார்; ஆரஞ்சு பழச்சாறு அருந்துவார். பிறகு, படுக்கையில் சாய்ந்தபடியே, அன்றைய வேலை களை ஆரம்பிப்பார். உடல் ஓய்வாக இருக்குமே தவிர, மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இரண்டு நாள் கழித்து செய்யவிருக்கும் சொற்பொழிவைத் தயாரிப்பதாக இருந்தாலும் சரி, புத்தகத்தின் மற்றொரு அத்தியாயத்தை எழுதுவதாக இருந்தாலும் சரி, அதிசயிக்கத்தக்க வேகத்தில் வார்த்தைகளை அடுக்குவார். மிகுந்த சாமர்த்திய சாலிகளாய் இருந்தாலொழிய, காரியதரிசிகளால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாது. வேகமிருக்குமே தவிர, அவசரமிருக்காது.குளியல் தொட்டியில், உட்கார்ந்தும், உட் காராததுமாக, அவர் முணு முணுக்க ஆரம்பித்து விடுவார். வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவர் என்ன சொல்கிறார் என்பது விளங்காமல், 'என்னைக் கூப்பிட்டீங்களா?' என்றேன்.'உன்னை யார் கூப்பிட்டார்கள்?' என்றார் அவர். 'நான் இப்போது, பார்லிமென்ட்டில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேன்!'உண்மை விளங்கிற்று. அவரது அரிய சொற்பொழிவுகளின் உற்பத்தி சாலை, அந்தக் குளியல் தொட்டி தான்! ***புனா நகரில், மதுரை மணி அய்யரின் கச்சேரி; பின் நடந்த விருந்தில், பாயசம் பிரதான இடம் பிடித்திருந்தது. ஒரு அளவுக்கு மேல், பாயசம் சாப்பிட யாராலும் முடியவில்லை. 'இன்னும் சாப்பிடுங்கோ... பாயசம் மீந்து போய் விட்டால் என்ன செய்வது?' என்றார் பரிமாறியவர்.கட வாத்திய வித்வான் ஆலங்குடி ராமச்சந்திரன், 'நான் சாப்பிடுகிறேன்... நான் போதும் என்று சொல்கிற வரையில், உங்களால் சப்ளை செய்ய முடியுமா?' என்று கேட்டார்.'தாராளமாக!' என்றபடியே, பாயச பாத்திரங்கள் ஏழெட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டார் பரிமாறுபவர்.முதல் கரண்டி பாயசம், ஆலங்குடி இலையில் விழுந்தது. உடனே அவர், 'போதும்!' என்று கூறினார்.பரிமாறுபவர் திகைக்க, 'நான் போதும் என்று சொல்கிற வரைதானே உம்மை பாயசம் போடச் சொன்னேன்...' என்றார், ஆலங்குடி.***நடுத்தெரு நாராயணன்