உள்ளூர் செய்திகள்

பப்பாளி!

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது, பப்பாளி பழம். இதில் உள்ள,'பாப்சின்' என்ற வேதியியல் பொருளுக்கு கடினமான உணவையும், எளிதாக செரிமானம் செய்யும் திறன் உண்டு. அசைவ உணவு உண்போர், உணவில் பப்பாளி பழத்தை சேர்த்துக் கொள்வது அவசியம்.சூரிய ஒளியின் பயன்களை முழுமையாக கிரகித்து, தன்னுள் அடக்கி வைத்துள்ளதால், பப்பாளி பழத்தில் விட்டமின், 'டி' அதிகம் உள்ளது. அடிக்கடி இப்பழத்தை உணவில் சேர்த்து கொள்ள, சருமம் பளபளப்பாகும்; சுருக்கங்கள் அகலும். மேலும், இப்பழத்தில் உள்ள விட்டமின், 'ஏ' கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பப்பாளி பழம், காசநோய் கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது; அத்துடன், வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு, மூலநோய், வயிற்றுக் கடுப்பு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு நல்ல நிவாரணம் தரக்கூடியது.தாய்ப்பாலை சுரக்க வைக்கும் தன்மை கொண்ட இப்பழத்தின் காயை, பொரியல் செய்து சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு பிரச்னைகள் தீரும்.பப்பாளி பழத்தை நன்கு குழைத்து, முகத்தில் பூசி, 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.பப்பாளி பழத்தை உணவில் அதிகம் பயன்படுத்துங்கள்; உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !