உள்ளூர் செய்திகள்

பட்சண புதிர்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்து வாக்கியங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு இனிப்பு வகை ஒளிந்துள்ளது. அது என்ன என்று கண்டுபிடியுங்களேன்.1. அதிகம் பேசும் அன்புவட்டக்காரன்; நவரசம் பேசும் நட்பு வட்டக்காரன்.2. உதிரிகளோடு கூட்டணி வைத்த திருமலை பக்தன்; உருண்டு வந்து பூஜையில் அமர்ந்து பிரசாதமானான்.3. பக்குவப்பட்டால் சீரடைவான்; பதம் தவறினால் பல்லை உடைப்பான்.4. தேன் மழையென குழல் இசை தந்தவன்; திகட்டாத ருசிக்கு சொந்தமானவன்.5. அகில உருண்டையாய் ஆடி வந்து, அஸ்கா பாகில் மிதந்த ஜாலி நிலா.6. ஏமாந்தவனுக்கு எதிராளி கொடுக்க, திருநெல்வேலியில் தேர்ந்தெடுத்து வாங்கியது.7. மைசூர் மாளிகையின் தவப்புதல்வன் பாகுபலியாகி பரவசமானான்.8. ஜாகிங் போகும் கிங்கரன், சர்க்கரைப் பாகில் குளித்த கிரிதரன்.9. சப்புக்கொட்டி தின்ன வைப்பான், பப்படி பாலகன் சோன்பப்பா.10.சீனிரசம் குடித்து வந்த சின்னப்பையன் குல்லா போட்டு குதித்து வந்த குண்டுத்தலையன்.

விடை:

01. அதிரசம்02. லட்டு03. சீடை04. தேன்குழல்05. குலோப்ஜாமூன்06. அல்வா07. மைசூர்பாகு08. ஜாங்கிரி09. சோன்பப்பட்டி10. ரசகுல்லா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !