நீரில் மிதக்கும் பெருமாள்!
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை, திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால், நம் அண்டை நாடான நேபாளத்தில், 1,300 ஆண்டுகளாக, நீரில் மிதந்தபடி இருக்கிறார், பகவான் விஷ்ணு.நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, 9 கி.மீ., துாரத்தில் உள்ளது, 'புத்தானி கந்தா' என்ற கோவில். இங்குள்ள குளத்தில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில், மிக பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளது, விஷ்ணு பகவானின் சிலை.நீரில் மிதந்து கொண்டிருக்கும் இச்சிலை, ஒரே கல்லில் வடிக்கப்பட்டது. இது, 7ம் நுாற்றாண்டில், இப்பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னனால் நிறுவப்பட்டது.நீரில் மிதக்கும் பெருமாளைக் காண, சுற்றுலா பயணியர் கூட்டம் அலை மோதுகிறது! - ஜோல்னா பையன்.