உள்ளூர் செய்திகள்

மன அழுத்தத்தை போக்கும் தலையணை சண்டை !

ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச தலையணை சண்டை தினம், கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நாளில், முக்கிய நகரங்களின் மையப் பகுதியில், ஏராளமானோர் தலையணைகளுடன் திரண்டு வந்து, ஒருவரை ஒருவர், தாக்குவர். தலையணை பிய்ந்து, அதில் உள்ள பஞ்சு வெளியே வரும் வரை, சண்டையிடுவர். சமீபத்தில், லண்டன், பாரீஸ், மாட்ரிட், ரோம் ஆகிய நகரங்களில், இந்த வித்தியாசமான திருவிழா நடந்தது. வேலைப் பளு, குடும்ப பிரச்னை போன்றவை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காக, இந்த சண்டை திருவிழாவை நடத்துகின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !