கவிதைச்சோலை - முதுமை
* வருத்தப்படவில்லை மகனே...உன் சொல்லும், செயலும்நியாயமானது... சரியானது...* உலகம் ஆயிரம் சொல்லட்டும்...உற்றார் உறவினர் எப்படியும்ஏசட்டும்... கவலைப்படாதே...* மனக்கசப்புடன் மருமகள்...ஒட்டாத பேரன், பேத்திகள்இனியும் உழைக்கஒத்துழைக்காத உடம்பு...* திண்ணையும், புல் தரையும்காணாமல் அகதியாய்அடுக்குமாடிக் குடியிருப்பில்நகரத்து நரக வாழ்க்கை...* இவை எதுவுமின்றி இப்போதுநலமாய் இருக்கிறேன் மகனே...உனக்கு நன்றிசொல்லத்தான் வேண்டும்...* மழை, வெயில் தெரியாத இருப்பிடம்...வேளா வேளைக்கு உணவு...வேலையின்றி அமைதியான ஓய்வு...நல்லதொரு வயதான நட்பு வட்டம்...* பொழுது போகபூஜை... பஜனை...தாராள மருத்துவம்...இன்னும் என்ன குறை எனக்கு?* நீ மட்டும் வாரம் ஒருமுறைகுடும்பத்துடன் வந்து முகம் காட்டு...உள்ளபடியே நான் மகிழ்வுடன்இருக்கிறேன் இந்தமுதியோர் இல்லத்தில்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.