கவிதைச்சோலை - என்ன செய்ய !
* அந்த நினைவுஅடுக்குகளில் எந்தஅடுக்கில் நீ ஒளிந்திருக்கிறாய்புரியவில்லை...ஆனால், அடிக்கடிநான் விரும்பாத வேளையிலும்கூட என்னில்எட்டி எட்டிப் பார்க்கிறாய்...* அந்த வசந்த காலங்களைஇந்த கசந்த காலங்களோடுஒப்பிடும் போது...அது என் வாழ்வில்எவ்வளவு பெரிய பொற்காலம்என்பது இப்போதுஉள்ளே ஒளிர்கிறதுஉணர்வுத் திரியில்...* அந்தத் தீயைவிளக்காகத் தான்வெளிச்சம் தர பயன்படுத்தநினைக்கிறேன்...ஆனால், நீ மட்டும்எனக்குள் விழித்துஎழுந்து என்னையேஎரியச் செய்துவிட்டுப் போய் விடுகிறாய்...* பஸ்பமாகி, சாம்பலாகித்திரும்பத் தான்இன்னொரு பிறவிஎடுத்து எனக்குள்எழுகிறேன்...* விட்டுச் சென்றகாலடிச் சுவடுள்அந்த சுண்டு விரலின்விரிவில் ஏனோஉன் மருதாணிவரைந்த வெண்சிவப்புபாதங்களைத் தான்நினைவுப்படுத்தி விட்டுப்போகின்றன...* ஏன் எனக்குள்அடிக்கடி விழிக்கிறாய்...எத்தனையோ அடுக்குகள்மறைந்து மறந்துபோன போது...நீயும் அத்தோடுதொலைந்து போவாய்என்று தான்எண்ணியிருந்தேன்...* ஆனால், நினைவுகளில்தொலைந்து போகவேண்டியவைகள் தான்அதிகமாக வந்துஞாபக விளிம்புகளில்குடி கொண்டிருக்கின்றன...அந்த விளிம்புமுழுவதும்உன் கறுப்பு - வெள்ளைவிழிப் பூக்கள்நிறைந்து வழிய...* ஒழிந்து போஎன்று சாபமிடவிரும்புகிறேன்முனிவனாக இருந்திருந்தால்...ஆனால், முட்டிப்பார்க்கும் உன்நினைவுகளை எறியமுடியாத ஏழை மானிடன்நான் என்ன செய்ய...— ரஜகை நிலவன், மும்பை.