உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்ந்துதான் பார்ப்போமே!* நம் வாழ்க்கைநமக்கே சொந்தம்...* எத்தனை கோடிமுகம் வைத்தாயோஅத்தனை கோடி மன இயல்பையும் படைத்தாய் இறைவா!* அன்பும், ஆற்றாமையுமாகஉறவுகள் ஆட்டி படைக்கட்டுமே...ஏற்றுக் கொள்...முரண்படாத மனிதன்இங்கு எவருள்ளான்?* உடனிருப்போர்போட்டி, பொறாமையுடன்பந்தாடட்டுமே...ஒதுங்கிக் கொள்...சுவற்றில் அடித்த பந்தாவர்!* சுயநலமும், பொதுநலமுமாகசுழன்றடிப்பர் நம் பாதையில்...வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகள்நம் வசப்படும்!* உன் பாதை எது என்றுதீர்மானித்துக் கொண்டாயா?சஞ்சலமும், சலனமும்இனி நமக்கில்லை!* வாழ்க்கை நம்மைகசக்கினாலும், மிதித்தாலும்நம் மதிப்பு குறையப் போவதில்லை!* பிறரை காயப்படுத்துவதைநிறுத்தினால்வாழ்க்கைக்கு புது அர்த்தம் தயமாகும்...வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்...முடிந்தால்புது சரித்திரம் படைப்போம்!* நம் வாழ்க்கைநமக்கே சொந்தம்!— செல்வி சீனிவாசன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !