கவிதைச்சோலை!
எங்கிருந்து கற்றாய்?* சொல்எங்கிருந்து கற்றாய் நீ?கற்களைத்தானேஎரிந்து சென்றேன்...எப்படி அதை நீகவிதைகளாய்மாற்றிக் கொண்டாய்?* கால்களைத்தானேகட்டி வைத்தேன்...எப்படி நீசிறகுகளைவளர்த்துக் கொண்டாய்?* முற்களைத்தானேநட்டு வைத்தேன்...எப்படி அதை நீபுற்களாக்கிகடந்து சென்றாய்?* புயல்களைத்தானேவீசி வைத்தேன்...எப்படி அதை நீதென்றலாய்திருத்திக் கொண்டாய்?* பாலைவனத்தில் தானேவிட்டு வந்தேன்...எப்படி அதை நீபனிப்பிரதேசமாய்படைத்துக் கொண்டாய்?* சூரியனைத்தானேவிட்டெறிந்தேன்...எப்படி அதை நீகுளிர் நிலவாய்அமைத்துக் கொண்டாய்?* பூகம்பமாய் தானேபுதைத்துக் கொன்றேன்...எப்படி நீபூச்செடியாய்முளைத்து நின்றாய்?* இப்படி என்எதிர்வினைகளை எல்லாம்ஏணியாக்கி ஏறிஅந்த வானத்தையேவளைத்துக் கொண்டாய்...* சொல்எங்கிருந்து கற்றாய் நீ?* எதிர்ப்பு கிளம்பும்போதெல்லாம்எரிமலையாய் மாறிஎரிக்குமந்த சூட்சமத்தை!— இளைய சாகுல், முத்துப்பேட்டை.