கவிதைச்சோலை!
காதலுக்காகவாவது...* ஒரு தோழனாய்உன்னைவிட்டு வந்தாலும்இப்போதெல்லாம்என் இருப்பிடம்வந்து சேர இயலவில்லை என்னால்...நிஜத்தை விட்டுவந்தநிழல்போல!* சிறு பறவைபறந்து போனதற்காகவருந்துவதாஅது பறக்கக்கற்றுக் கொண்டதற்காகமகிழ்வதா என்றுபரிதவிக்கிற தாய்ப்பறவையாய்பரிதவிக்கிறேன்...உன்னுடனான நட்புகாதலாக மாறிவிட்ட இன்று!* நட்பை காரணம் சொல்லிகாதலை இழக்க துணிகிறாய்...வாழ்வை இழந்து விடுவோமோ என்றுநான் பயப்படுகிறேன்!* எல்லா நதிகளையும் உள்வாங்கி,கடலென உருமாறி நிற்கும்பெருவெளியைப் போலஉன் நேசத்தை மட்டுமல்லகோபங்களையும்உள்வாங்கித்தான்காதலாய் உருமாறி நிற்கிறேன்!* நாம் இருவரும்பேசிக் கொள்வதில்லை...இதை விட வேறென்ன வேண்டும்ஒருவரையொருவர்புரிந்து கொண்டதற்கு!* எனக்காக வேண்டாம்...ஆசையில்லாமல் வாழ்வதற்கேனும்ஆசை ஒன்று இருப்பது போலகாதலுக்காகவாவதுகாதலித்துப் பாரேன்!* தெரியுமா உனக்கு...நட்புக்குள்காதல் இல்லை என்றாலும்காதலுக்குள்நட்பு உண்டென்பது?— என்.ரமேஷ், கொளத்தூர்.