கவிதைச்சோலை!
என்ன உரைத்தாள்?* சாவை வென்றெடுத்தசாவித்திரியாய் இரு!* சகித்துப் போவதில்கண்ணகியாய் இரு!* கூடா ஒழுக்கமாபரவாயில்லை...கூடையில் சுமந்தநளாயினியாய் இரு!* சீற்றம் கொண்டபோதும்சீதையாய் இரு!* உன்னைக் கரம் பிடித்தபோது,இத்தனையும் சொன்னாள்என்னைப் பெற்றவள்!* அலுவலக வேலை எனஅர்த்த ராத்திரியில்வரும் போதெல்லாம்கண்ணகியாய் நானிருந்தேன்!* போதையில் பொல்லாங்குசெய்த போதும்,பொறுமையில்சீதையாய் நானிருந்தேன்!* குடித்து குடித்துகுடல் நோவுடன்குடை சாய்ந்த தேராய்குலைந்து கிடக்கையில்சாவித்திரியாய் நானிருந்தேன்!* என்னை மணந்தவனே...உன்னைப் பெற்றவள்உனக்கென்ன உரைத்தாள்?* இத்தனையும் செய்தால்தான்ஆண்பிள்ளை நீ எனஉரைத்தாளோ?— ஜெ.பிரசின்னா, புது டில்லி.