உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தீ அணைப்போம் வாருங்கள்!

* தீ - எப்போதும்எரிந்து கொண்டுதான்இருக்கிறது - நம்ஒவ்வொருவருக்குள்ளும்!* சிலர் இதயங்களில்...கோபமாக, தாபமாக,வெறுப்பாக, விரக்தியாக,இன்னும் பலர் உள்ளங்களில்பொறாமையாகக்கூடஎரிந்து கொண்டு தான்இருக்கிறது!* பல சமயங்களில் பிறரைஎரிக்கவும் செய்கிறது...மனதாலும், செயலாலும்சுடுசொற்களாலும் சேர்த்து!* ஆற்றாமையால்இயலாமையால்ஓரிரு சமயங்களில்தன்னைத் தானேஎரித்துக் கொள்கிறது!* எப்போதும் மனதில் - தீபுகையும் போது தெரிவதில்லை...கோபமாய் பற்றும் போதுகூடநமக்குப் புரிவதில்லை...ஜோதியாய் எரியும் போது,அது பிறர் உள்ளத் தீயாய்இருந்தாலும் கூட - அதில்குளிர் காய்ந்து விடுகிறோம்!* அங்கு எரிந்து போனதுபிறர் மனங்களெனும் போதும்காரணம், நாமெனும் போதும்வருந்துவதேவாழ்க்கையாகிறது!* நம்மில் - யாராயிருந்தாலும்கோபத்தீயுடன் எழுந்து விட்டால்,இழப்புத் துயருடன்அமர்வது தானே விதி!* முயன்று பாருங்கள்...நம்மில் ஒட்டியுள்ள - பாசப்பற்றுகளைத் தூக்கி எறிய ஆசைத்தீ அணைந்து போகும்!* சகோதரத்துவத்தைசமப்படுத்த -பகைமைத் தீ பறந்து போகும்...அன்புக் கரங்களால்அரவணைக்கபொறாமை தீயும்புகைந்து போகும்!* நிறபேதமின்றிசமத்துவமாய் கை கோர்க்கஜாதித்தீ - சட்டென்றுசரிந்து போகும்!* வாழ்வில்... பொறுமையுடன்அமைதி நீர் ஊற்றும்போதுநம்மில் எரியும் எந்தத் தீயும்மறைந்து போய் - மனதில்இன்பப்பூ பூப்பதென்பதுஉறுதியாகும்!— ர.அர்ஜூன் சபரி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !