கவிதைச்சோலை!
நிலை!* மாளிகையில் வாழ்ந்தாலும்மண் குடிசையிலும்வாழ்ந்து பாருங்கள்!* அறுசுவை உணவு உண்டாலும் கூழ் குடித்தும்பழகிப் பாருங்கள்!* பட்டாடை அணிந்தாலும்எளிமையான ஆடைகளையும்அணிந்து பாருங்கள்!* குறையில்லா கண்கள் எனினும் கண்மூடி கொஞ்சம்நடந்து பாருங்கள்!* கைகால்கள் பழுதில்லை என்றாலும் ஒற்றைக் காலில் நடந்து ஒற்றைக் கையில்வேலை செய்து பாருங்கள்!* நன்றாகக் கேட்கும் காதுகளைகொஞ்சம் பஞ்சடைத்துஇருந்து பாருங்கள்!* மென்று விழுங்கும் பற்கள் படாமல்திரவ உணவுகளைஅருந்திப் பாருங்கள்!* உற்றார் உறவினர் சுற்றம்நட்பு இல்லாமலும்விலகிப் பாருங்கள்!* மாறுதலுக்குரிய மனித வாழ்வில்நம் பயிற்சியே நிலையானமகிழ்ச்சிக்குரியது எனவாழ்ந்து காட்டுங்கள்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.