கவிதைச்சோலை!
தண்டனை!* காமம் அவளின்கண்ணை மறைத்ததுகருவறையில் நான் நுழைந்தேன்!* காமம் தொலைந்துஅவளின் கண் திறந்ததுநான் வளர்ந்து விட்டேன்!* காதல் கசந்ததுகல்யாணம் கனவாய் போனது!* அவமானத்தின் சின்னமென்றுஅவமதிக்கப்பட்டேன்...அவளின் உறவினரால்!* எங்கோ ஒரு ஊரில்என்னை பிரசவித்தாள் அவள்!* என் முகம் பார்த்த அவளோஎன்னில் அவனைக் கண்டாள்!* குப்பைத் தொட்டியில்வீசப்பட்டேன்...அவளின் காதலைப் போலவே!* அவனும், அவளும்செய்த தவறுக்குதண்டனை எனக்குகுப்பைத் தொட்டி!— ப.லட்சுமி, கோட்டூர்.