உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அப்பா!* கண்மூடி உன் கைகளில்கிடந்த போது...எனக்கான கனவுகளைநீ சுமந்தாய்!* ஆறடி உயரத்தைஅரையடியாய் குறுக்கிஅம்பாரி நான் ஏற...ஆனந்தமாய் நீ ரசித்தாய்!* 'அ' எழுதியதற்கே...'அறிவாளி என் மகள்' எனஆனந்த கூத்தாடினாய்!* என் ஆசைகளுக்குஅஸ்திவாரமிட்டதில்...உன் தேவையைநீ மறந்தாய்!* இரவும், பகலும்எனையே நினைத்தாய்!உன் வியர்வையைஉணவாய் தந்தாய்!* என்னை சிலையாக்கஉன்னை சிதைத்துக்கொண்டாய்!* கல்யாணம் செய்வித்துகடனாளியாகி நின்றாய்!* நீ கொடுத்த கல்வியால்பணங்காய்க்கும் மரமாய்நான்!* வயோதிகமும், வறுமையும்உன்னை வாட்ட...ஒரு நூறு உனக்கு கொடுக்கஎனக்கோ உரிமையில்லை!* உயிர் கொடுத்த உத்தமனே...என்னை மகளாய் பெற்றதனால்என்ன சுகம் கண்டாய் நீ?— ப.திலகவதி, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !