உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முள் வேலிகள்!* தமிழா தமிழா... உறக்கம் போதுமே...தருணம் இதுவே எழுவாய், நிமிருவாய்...உமிழும் நிலையில் உன்னை வளைக்கிறாய்ஒடுக்கும் கதிக்கு வலைகளை விரிக்கிறாய்தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* தெற்கில் நீயோ ஓடிட இயலாதிரைகடல் மறிக்க, விழுந்து சாவாய்!நிற்க இடமிலா நிலைமை வருமுன்நீயுனை உணர்வாய் ஈழம் சான்று!தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* நம்மொழி ஈன்ற குழந்தை மொழிகள்நா‹க் காக சகோதரியாகிமும்முனை நின்று நீர்களை முடக்கிமூச்சை பறிக்கும் முயற்சிகள் தேவையா?தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* அரசியல், பதவிகள், அகப்படும் சுருட்டல்கள்அற்பமாய் தமிழர்கள் எலிப்பொறியில் வீழ்ந்தனர்உரசிடில் இவர்களும் எட்டப்பர்களே!உனைநீ யுணர்ந்து விரைந்து முடிவெடு!தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* ஆதி இலங்கை அழிந்தது; காரணம்,அந்நியன் புகுந்ததால் அநாதைத் தமிழர்கள்...நீதி ஏதும் செய்திலை; எனவே,நீ விழிப்பாயே... நிலைகொள் வாயே...தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* நாட்டை சுடுகா(டு) ஆக்கிடும் முயற்சிகள்நலியும் அரசியல் எலிகளால் ஆச்சு!கோட்டை விட்டுக் கொடிகளை இழப்பின்குங்குமத் தமிழே மயானமாய் எரியும்தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* நதிகள் வயப்பட வழியேது யோசி?நயமிலா அந்நியர் புகுவதை யோசிவிதிளை மாற்றிப் போரிட யோசிவீணில் தூங்கினால் முள்ளின் வேலிகள்...தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!— டாக்டர் கோவி.மணிசேகரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !