உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சில காலங்களே எங்களுக்கு!* ஜாதி, மதபேதமில்லைஎங்களுக்கு!* உயர்வு, தாழ்வுபிரிவுமில்லைஎங்களுக்கு!* சிரிப்பிலேசிக்கனமில்லைஎங்களுக்கு!* அவசியமில்லாஅழுகையுமில்லைஎங்களுக்கு!* வரவு, செலவுகணக்குமில்லை எங்களுக்கு!* கடந்த காலம்வருங்காலம்எதுபற்றியும்கவலையில்லைஎங்களுக்கு!* எதுவும் பயமில்லை...யார் பற்றியும்கவலையில்லைஎங்களுக்கு!* விளையாட்டும்தொழிலாய்இருந்திடும்எங்களுக்கு!* எங்களைஇப்படியே விட்டுவிடமனமில்லையோஉங்களுக்கு?* இதுவெல்லாம்சில காலங்களேகுழந்தைகளானஎங்களுக்கு!— வா.முகிலன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !