உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உன் காதலும், அவன் நினைவுகளும்!

* அர்த்தங்களோடுபொதிந்துவிலை மதிப்பற்ற பொருளாய்உருவாகும் கண்ணீரை...* காதலுக்காக உ<ருக்கிதலைகுனிய வைக்காதேஇளைய சமுதாயத்தை!* மையில்லாத பேனாவால்காகிதத்தில் கிறுக்கியதெல்லாம்வார்த்தைகளென நம்பிஎதிர்காலத்தையேவிரயமாக்கிநிற்பவர்களையும்...* கற்பனை கதைகளைரசித்துகற்பைப் பறிக்கொடுத்தவர்களையும்...எந்த சிறையில்தள்ளுவது!* உன்னிடம்காதலைக் காண்பித்துகற்பைதிருடிச் சென்றவனைஎன் கவிதைகளில்தேடுகிறேன்!* விடிந்து விடாதுவிடியலும் வந்துவிடாதுஉன் தொடர் அழுகையால்!* கத்தையாய் கலைந்திருக்கும்உன் கூந்தலைமொத்தமாய் அள்ளிமுடிந்து கட்டு!* வழிந்தோடும்உன் கண்ணீரைகலைந்திருக்கும்முந்தானையால் துடைத்தெடு!* கோபத்தைஎரிப்பொருளாக்குவிழிகளால் தீ மூட்டு!* எரிந்து சாம்பலாகட்டும்உன் காதலும்அவன் நினைவுகளும்!— அ.கென்னடி, லால்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !