கவிதைச்சோலை!
வாழ்ந்து காட்டுவதே காதல்!* அன்பைஆராதிக்கிற காதல்ஒரு போதும்உயிர் பலியைகேட்பதும் இல்லைஏற்பதும் இல்லை!* அகிம்சையைநேசிக்கிற காதல்மரணத்தையாருசிக்கக் கேட்கிறது! * துயரத்தில் ஆழ்த்திநெஞ்சத்தைகனக்கச் செய்கிறஅவ்வப்போது நிகழும்காதல் தற்கொலைகள்!* வாழ்க்கையைவாழாமல்சாகும் கோழைகளைகாதலேசபிக்கும்!* காதல் மட்டும்தான்வாழ்க்கையா?காதல் முடிந்து போனால்வாழ்க்கையேமுடிந்து போகிறதா?* சாவதில் இல்லை...சவால்களையும்எதிர்ப்புகளையும் மீறிவாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறதுகாதலின் பெருமை!* ஒவ்வொருகாதல் தற்கொலைகளின் போதும்தலைகுனிகிறதுகாதல்!* காதல்உயர்வானதுதான்பெருமைக்குரியதும்புனிதமானதும்தான் -வாழ்ந்து காட்டுகிற போது!— செந்தலை நெப்போலியன், மண்ணூர்பேட்டை.