கவிதைச்சோலை!
இந்தத் தாலாட்டு!* தூளி இல்லாமல்தொட்டில் சேலையில்லாமல்தூங்க வைக்கிறதுஇந்தத் தாலாட்டு!* விழித்துக் கொண்டேஉறங்க வைக்கும்ஒரு வித்தையைச் செய்கிறதுஇந்தத் தாலாட்டு!* நடந்து கொண்டும்உட்கார்ந்து கொண்டும்படுத்துக் கொண்டும்ரசிக்க வைக்கிறதுஇந்தத் தாலாட்டு!* உத்திரத்தில்பொம்மை இல்லைஒய்யார பூக்களில்லைஅப்படியும் அசத்துகிறதுஇந்தத் தாலாட்டு!* செல்லாக் காசுகளையும்மெல்லக் கிடத்திமன்னராக்கி விடுகிறதுஇந்தத் தாலாட்டு!* மன்னர்களைக் கூட சில சமயம்மண்ணைக் கவ்வ வைத்து விடுகிறதுஇந்தத் தாலாட்டு!* அன்னையர் பொதுவாகஏற்பதுமில்லைஇசைப்பதுமில்லைஇந்தத் தாலாட்டு!* அடுத்தவர்கள் அதரங்களால்அர்ச்சிக்கப்படுவதேஇந்தத் தாலாட்டு!* பகல் தூக்கத்திற்காகவேபாடப்படுகிறதுஇந்தத் தாலாட்டு!* இதில்-பகடையாக்கப்படுவதுகளைப்பு அல்லபலபேரின் பிழைப்பு!* உறக்கத்திற்கு ஒரு தாலாட்டு என்றால்மயக்கத்திற்காகவே இந்தத் தாலாட்டு...இதற்கு-புகழ் என்று மற்றொரு பெயரும் உண்டு!— வே.சின்னத்தம்பி, திருச்சி.