உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலம் மாறித்தான் போச்சு!* கூண்டு வண்டிக்குள்எழுந்து நின்ற நிலைமாறிஇன்று கூகுளுக்குள்கை குலுக்குகின்றனர்மாமனாரும் - மருமகளும்!* கொல்லையில் உரல்கள்பல கிடக்க, பத்து ரூபாய்கொடுத்து உரலில் மாவரைத்துபார்க்கின்றனர் - என் மருமக்கள்'தட்ஷன் சித்ரா'வில்* பாட்டியின் அன்பு ஸ்பரிசமின்றிபாட்டி சொன்ன கதைகளைரசிக்கின்றனர் - பேரக்குழந்தைகள்பாட்டுடன் கதை சொல்லும்ஒலி தகட்டில்!* தொப்புள் கொடி தாயத்தில்அடைத்தது போகஇன்று பிறந்த குழந்தைதன்முதல் சேமிப்பு கணக்கைதொடங்குகிறது ஸ்டெம்செல்வங்கியில்!* கூட்டு குடும்பத்தில்குஷியாக இருந்த முதியவரைகூவி கூவி அழைக்கின்றனமுதியோர் காப்பகங்கள்!* சிட்டுக்குருவி கூட எங்கோபோய்விட்டதுசிறகு விரிக்க மனமின்றிஅதற்கும் ஒரு வருத்தம்நம்மை நேசித்த மனிதர்கள்யோசிக்க மறந்து விட்டனரே!* விஞ்ஞான முன்னேற்றம்பிரமிக்க வைக்கிறது!உறவுகளின் தடுமாற்றம்யோசிக்க வைக்கிறது!— சங்கமித்ரா, நெல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !