உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

உனக்காக ஓர் இதயம்....* மறுபடியும் உன்சந்திப்புகளோஉரையாடல்களோகடைக்கண் பார்வைகளோநிகழாத வரைநின்று போகாது என்நிகழ்காலம்!* நம்மிடைசிறகடிக்கும் கனவுகளையும்,கரம் பிடிக்கும் ஆசைகளையும்வார்த்தை முற்றுப்புள்ளிகளால்இறகொடித்து வழியெங்கும்தூவிக்கொண்டுமுன்னோக்கி நகர்கிறாய்!* என்ன செய்வது?வீதியெங்கும் சிதறியபுள்ளிகளின் தடைகளாய்பின்னோக்கி நகர்கின்றன நம்காதலும், சந்தோஷமும்!* ஒரு வேளை நீகாகக்கூட்டில்முட்டையிடும் குயில்கள் போலகாத்திருக்கலாம் அல்லதுதொட்டி மீனின்நீந்தும் இலக்குகளுக்காகபறந்து விரியும் வானின்எல்லைகளை நீவிரும்பாதிருக்கலாம்!* இல்லை...ஓடு மீன் ஓடஉறு மீனுக்காகவும்காத்திருக்கலாம்!* எது எப்படியோ...சுற்றும் இந்த பூமியில்நம் சந்திப்புகள்என்றாவதொரு நாள்நிகழாமலா போகும்!* அப்போது நிஜங்கள் நிச்சயம்உன்னைக் கைது செய்யும்!* மனம் பிடுங்கிமனம் கொன்றவருக்குதண்டனைமன்னிப்பாகவும் இருக்கலாம்.மறுப்பதிற்கில்லை.குற்றவுணர்வுகளின் பிடியில்குலையறுந்துகுற்றுயிராகப் போகலாம்...தடுப்பதும் சாத்தியமில்லை!* அப்போதும் கூடஉனக்காகத் துடிக்கஎப்போதும் ஓரிதயம்என்னிடமிருக்கிறதுபுரிந்து கொள் அன்பே...வாழ்வின் தொடக்கப்புள்ளிபுரிதலின் ஆரம்பத்தில் தான்புதைந்திருக்கிறது!— 'செல்லம்' ரகு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !